Friday, 6 December 2019

அகத்திக் கீரை சூப்

ஒரு லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு - ஐந்து பூண்டு பற்கள் போட்டு - சீரகம் ஒரு தேக்கரண்டி - மிளகு சிறிதளவு-  சுக்குத் தூள் சிறிதளவு - அகத்திக் கீரை ஒரு கைப்பிடி போட்டுக் -  கொதிக்க வைத்து ஐநூறு மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி தேவையான அளவு இந்துப்பு சேர்த்துக் குடிக்கலாம்

கண சூடு வெட்டை சூடு மூல சூடு சரியாகும்
இரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் வாரம் மூன்று முறை அகத்திக் கீரை சாப்பிட்டு வர குணமாகும்
தேவையற்ற மருந்து மாத்திரைகள் மூலிகைகள் சாப்பிட்டதால் வரும் ஒவ்வாமையை முறிக்கும்
மருந்து முறிவு மூலிகையாக பயன்படும்




அகத்திக் கீரையை பச்சையாக அரைத்து
பாலில் சேர்த்து  பனைவெல்லம் கலந்து
அல்லது
மோரில்  கலந்து சிறிது இந்துப்பு சேர்த்துக்
லந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர குடல் புண் ஆறும்
குடல் புண் தொண்டைப் புண் வாய்ப்புண் அகத்திக் கீரையை மென்று தின்று விழுங்க சரியாகும்
எச்சரிக்கை
குடித்து இருப்பவர்கள் மது அருந்திய ஆறு மணி நேரம் முன்னும் பின்னும் அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது – மீறி சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடும்

No comments:

Post a Comment