Monday, 9 December 2019

புதினா இலை

#பயன்பாடு :

இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புதினா இலைகளை பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. குறிப்பாக செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இவை மருந்தாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதைத் தவிர பற்களுக்கு, சருமப் பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள் ,சில மருந்துகளிலும் அதோடு குறிப்பிட்ட சிகரெட்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது புதினா இலைகளை அடிக்கடி சமையலில் சேர்ப்பதினால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளலாம்.




செரிமானம் :

இன்றைய வாழ்க்கை முறையில் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். அதோடு உடல் அசைவுகளுக்கு அதிகமான வேலை இருப்பதில்லை. இதனால் சாப்பிட்டவை செரிமானம் அடைவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்க புதினா இலைகள் உதவிடும். இவை எச்சில் சுரப்பை அதிகப்படுத்தும் இதனால் செரிமானத்திற்கு தேவையான என்சைம்ஸ் அதிகப்படியாக உற்பத்தியாகும்.

கல்லீரல் :

கல்லீரல் துரிதமாக வேலை செய்ய உதவிடுகிறது. கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதனைத் தவிர்க்க இது உதவிடும். தினமும் குடிக்கிற தண்ணீரில் இரண்டு புதினா இலைகளை போட்டுக் குடிக்கலாம். அப்படியில்லையென்றால் தினமும் வெறும் வயிற்றில் புதினா இலைகளை வெறுமனே கடித்து சுவைக்கலாம்.

குளிர்ச்சி :

புதினாவிற்கு இயற்கையாகவே உடலை குளிர்விக்கும் தன்மை உண்டு. வெயில் காலங்களில் புதினா நீரை தொடர்ந்து குடித்திடுங்கள். இதனால் டீ ஹைட்ரேசன் வராமல் தவிர்க்கப் பயன்படும். அதோடு உடலின் வெப்பநிலையை சரிசமமாக வைத்திருக்கவும் உதவிடும்.

ஆஸ்துமா :
ஆஸ்துமா பிரச்சனையினால் பாதிக்கப்படவர்களுக்கு புதினா இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். சாதரணமாக புதினா இலைகள் சாப்பிடுபவர்களுக்கே மூச்சு விடும் போது சற்று ஆசுவாசம் கிடைத்தது போல இருக்கும்.

இவற்றில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்றுக்களை அழிக்க வல்லது. சிலருக்கு இது அலர்ஜியை ஏற்படுத்துக் கூடும் என்பதால் கவனம் தேவை.

பற்களுக்கு :

புதினாவில் இருக்கிற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஈறுகளுக்கு வலுவூட்டும் அதோடு பற்களில் ஒளிந்திருக்கும் கிருமிகளை அகற்றிடும். தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் கெட்ட நாற்றத்தை போக்கிட உதவிடுகிறது. வெங்காயம் பூண்டு ஆகியவை சாப்பிட்டால் ஒரு கெட்ட நாற்றம் வருமே அதனைப் போக்கவும் புதினா சாப்பிடலாம்.

 வாயுத் தொல்லை :

புதினாவில் இருக்கிற அமிலங்கள் உணவை துரிதமாக செரிமானம் செய்ய உதவிடுகிறது. இதனால் வயிற்றில் ஏற்படக்கூடிய செரிமானக் கோளாறுகள் தவிர்க்கப்படும். குறிப்பாக வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும்.

சமையலாக அல்லாமல் புதினாவை கொதிக்க வைத்த நீரை பருகிடலாம்.

 புற்றுநோய் :

புதினாவில் செல்களுக்கு வலுவூட்டும் சத்துக்கள் ஏரளமாக இருக்கின்றன. இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் செல்களில் புற்றுநோய் வளர்ச்சியை தடுத்திடும். அதோடு உள் உறுப்புகளை துரிதமாக செயல்பட வைக்கிறது.

அதே நேரத்தில் உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றவும் உதவிடுகிறது. கரும்புள்ளி
   சருமத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதிலிருக்கும் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்கள் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவிடுகிறது. முகத்தில் தோன்றிடும் பரு, வலியை உண்டாக்கக்கூடிய பரு,கரும்புள்ளி, சரும சுருக்கங்கள் ஆகியவற்றை எல்லாம் போக்க இதனை பயன்படுத்தலாம்.

ஒரு கைப்பிடியளவு புதினா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை அழுத்த நசுக்கி முகத்தில் அல்லது சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டிருக்கும் இடத்தில் தேய்த்திடுங்கள். பேஸ்ட் போல அரைத்தும் பூசலாம்.

தாய்ப்பால்
கொடுக்கும் பெண்களுக்கு சில நேரங்களில் மார்பகத்தில் அலர்ஜி அல்லது எரிச்சல் ஏற்படலாம். அதனை தவிர்க்க புதினா இலைகளை ஊறவைத்த நீரைக் கொண்டு மார்பகத்தை கழுவிங்கள். பின்னர் சாதரண நீரைக் கொண்டு கழுவி விட்டு டவலில் துடைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் துகள்கள் அலர்ஜியை கட்டுப்படுத்தும்.

No comments:

Post a Comment