Thursday, 5 December 2019

சாக்லேட் சந்தேஷ்

தேவையான பொருட்கள்:
பனீர் (துருவியது) – ஒரு கப்
பொடித்த சர்க்கரை – கால் கப்
கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சில துளிகள்
முந்திரி – அலங்கரிக்க


செய்முறை:
துருவிய பனீரை நன்கு பிசைந்து மிருதுவாக்கவும். அத்துடன் கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.
வாணலியைச் சூடாக்கி இந்தக் கலவையைச் சேர்த்து சில நிமிடங்கள் புரட்டி எடுத்து ஆறவிடவும். பிறகு, உருண்டைகளாக உருட்டி மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

No comments:

Post a Comment