Tuesday, 9 June 2020

கீரையின் பயன்கள் !!!

👉 நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம்.

👉 அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான்.

👉 பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அவற்றினால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

👉 இதனை தவிர்க்க நமது வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரைகளை வளர்க்கலாம்.


👉 அப்படி வளர்க்கப்படும் ஆர்கானிக் கீரைகளின் நன்மைகள் பற்றி தெரியுமா?

👉 நம் உணவில் முக்கியமாக சேர்க்க வேண்டிய கீரைகள் பற்றி பார்ப்போம்.

பசலைக் கீரை :

🌿 பொதுவாக இது கீரைகளின் அரசன் என அழைக்கப்படுகிறது.

🌿 இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரகப் பிரச்சனைகள் வராது.

🌿 மேலும் புற்று நோயை தடுக்கும் குணமும் இந்த கீரைக்கு உண்டு.

முருங்கைக் கீரை:

🌿 உடல் சூடு, தலைவலி, தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கி உடலை பலப்படுத்தும்.

🌿 மாலைக் கண் நோயாளிகள் இந்த கீரையை சாப்பிட்டு வர விரைவில் நோய் குணமாகும்.

வல்லாரை கீரை :

🌿 மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

புதினாக் கீரை :

🌿 இரத்தத்தை சுத்தம் செய்கிறது. சளி பிடிக்காது.

🌿 பசி எடுக்காதவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வர நல்ல பசி எடுக்கும்.

மணத்தக்காளி கீரை :

🌿 வாய், வயிற்றுப்புண் சரியாகும். தேமல் இருப்பவர்கள் இந்த கீரை சாப்பிட்டால் தேமல் காணாமல் போய்விடும்.

வெந்தயக் கீரை :

🌿 மலச்சிக்கலை குணப்படுத்தும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

அகத்திக் கீரை :

🌿 இக்கீரையானது காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை கட்டுப்படுத்தும் இயல்புடையது.

🌿 குடல்புண், அரிப்பு, சொறி, சிரங்கு முதலிய தோல் நோய்களை குணப்படுத்தும்.

👉 பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

👉 ஏனெனில் கீரைகளில் அதிக நார்சத்து உள்ளதால் செரிமானம் அடைய நேரம் ஆகும்.

👉 எனவே உடல் நலம் பெறவும், பல நோய்களில் இருந்து விடுபடவும் தினமும் உணவில் ஒரு கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள் !!!

No comments:

Post a Comment