பனம்பூவை உலர்த்தி கொளுத்தி சாம்பலாக்கி சலித்து அரைகிராம் அளவு நீரில் கலந்து காலைமாலை குடித்துவர வாதகுன்மம்,நீரெரிச்சல் குணமாகும்.
★ கிழங்கை உலர்த்தி பொடித்து தேங்காய்பால் சிறிதளவு உப்பு சேர்த்து பிட்டவியல் செய்து தினமும் உண்டு வர உடல் வலிமை பெறும்.
★ கிழங்கை அவித்து தோல் நரம்பு நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடித்து பாலில் கலந்து பருகிவர மேகம், கரப்பான், குருதிக்கழிச்சல்,சீதக்கழிச்சல் ஆகியவை நீங்கும்.
★ வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு நீங்குவதற்கு நொங்கை உடல் முழுவதும் தேய்த்து அரைமணி விட்டு குளிக்க பூரணகுணம் பெறும்.
★ நான்கைந்து இளம் நொங்கை தோலுடன் மூன்று நாள் சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கி உடல் குளிர்ச்சியுண்டாகும்.
★ இனிப்புள்ள பனங்கள்ளை அதிகாலையில் 250 மில்லி தினமும் குடித்துவர பித்தவெட்டை,அழலை,வெள்ளை,சொறி,சிரங்கு,எய்ட்ஸ், கேன்சர், சொரியாசிஸ் முதலியவை நீங்கும், உடல்பொலிவும் யானையைப்போல் பலமும் உண்டாகும். சாகும்வரை வியாதி வராது.
★இனிப்பு தேவைப்படும்போது பனைவெல்லத்தை மட்டுமே பயன்படுத்தி வர உடல் வெப்பம் அடங்கும், பித்தம் தணியும், உடல் நலம் பெறும்.
★ பனங்கொட்டையிலுள்ள சீம்பு அமிர்தத்திற்கு ஒப்பானது, இதை உண்டுவர உடல் காயகல்பமாகும்.
★ பனங்கிழங்கு அடிக்கடி உண்டுவர போகசக்தியுண்டாகும், விந்து கட்டும்.
★ பனம்பழம் சாப்பிட்டு வந்தால் கண்களிலுள்ள அனைத்து நோய்களும் நீங்கி கருட பார்வையுண்டாகும்.
★ பனைத்தெளிவுநீர் மிகுதாகத்தை போக்கி உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.உடலுக்கு குளிர்ச்சி தரும்.
★ பனையோலையை கருக்கி தேங்காயெண்ணை விட்டு கலந்து ஆறாத புண்களுக்கு போட ஆறிவிடும்.
★ பனங்குருத்தை தட்டி கண்ணில் பிழிய கண்குருடு நீங்கும்.
★ புதுச்சட்டியில் 10 கிராம் மிளகை சாம்பல் நிறமாக வெளுக்க வறுத்து அதில் 3 கிராம் சீரகத்தை போட்டு பொரிந்த சமயம் அரைலிட்டர் நீர்விட்டு 125 மில்லியாய் சுண்ட காய்ச்சி வடிகட்டி தேவைக்கு பசுப்பால் சேர்த்து பனங்கற்கண்டு கலந்து குடித்துவர நீர்க்கடுப்பு, நீரெரிச்சல், சொட்டுமூத்திரம்,மருந்துவிசம் ஆகியன நீங்கும்.
No comments:
Post a Comment