Tuesday, 17 December 2019

இருமல் டானிக்

ஆடாதோடை இலைகள் .. -- மூன்று
அதிமதுரம் .. -- இரண்டு கிராம்
தாளிசப் பத்திரி .... -- -- இரண்டு கிராம்
அரிசித் திப்பிலி .. -- ... -- இரண்டு கிராம்
மூன்றையும் அரைத்து ஒன்றிரண்டாக தூளாக்கி எடுத்துக் கொள்ளவும்
மண் சட்டியை அடுப்பில் ஏற்றி சூடானதும்
ஆடாதோடை இலைகளைப் போட்டு கருக வதக்கி
தேன் ஊற்றிக் காய்ச்சி
இலைகளின் நிறம் மாறி வரும்போது
அரைத்து வைத்துள்ள தூளைப் போட்டு
சிறுதீயில் நன்கு கொதிக்க வைத்து
நானூறு மில்லி தண்ணீர் ஊற்றி சுரசமாக்கி

கொதித்தவுடன்
நூறு மில்லியாக சுருக்கி
இறக்கி
வடிகட்டி
காலை மதியம் இரவு வேளைக்கு முப்பது மில்லி குடித்து வர
இருமல்
நீண்ட நாட்களாக இருக்கும் நாட்பட்ட இருமல்
இளைப்பிருமல்
சளி
கபம்
நீங்கும்
ஒவ்வொரு நாளும் புதிதாகத் தயாரிக்க வேண்டும்

No comments:

Post a Comment