Monday, 9 December 2019

காளாஞ்சிகப் படை

பித்தமும் கபமும் தான் தோலைப் பாதிக்கிறது. 
காலாவதியான அணுக்கள் கல்லீரலுக்கு வரும்போது 2 மடங்கு சுண்ணாம்பு சத்தும், 1 பங்கு கந்தகச் சத்தும் கொடுத்து கல்லீரல் புதிய அணுக்களை உற்பத்தி செய்கிறது. காலாவதியான அணுக்கள் புதிய செல்களாக மாறாமல் கழிவுகளாகவே இருந்தால் அது வெளியேற்றப்படும். தோலின் எந்த பகுதி புறக்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு பலவீனமாக உள்ளதோ அந்த பகுதி வழியாக கழிவு செல்கள் வெளியேற்றப்படுகிறது. அந்த இடத்தில் தோல்கள் செதில் செதில்களாக உதிரும். இந்நோய்க்கு காளாஞ்சிகப் படை என்று பெயர். இது வெளித் தொற்றுநோய்க் கிருமி தாக்குதலால் ஏற்படும் நோய் ஆகும்.
அனைத்து தோல் நோய்களுக்கும் கண்டிப்பாக கந்தகத்தைச் சேர்க்க வேண்டும். அதேபோல் மருந்து கொடுக்கும் முன்பு பேதிக்கும் மருந்து கொடுக்க வேண்டும். இந்நோய்க்கு பொட்டாசியசத்து 1பங்கும், கந்தகம் 20 பங்கும் கலந்த மருந்தைக் கொடுக்க வேண்டும். 




சிறுபீளை, சிறுநெருஞ்சில் இரண்டிலும் பொட்டாசிய சத்து உள்ளது. அதாவது பொட்டாசிய சல்பேட்டாக உள்ளது. இந்த சூரணத்தோடு கந்தகம் சேர்ந்த மருந்துகளை சேர்த்துக் கொடுக்க செதில் நோய் குணமாகும்.
வெளிப்பூச்சி மருந்தாக வெட்பாலைத் தைலத்தை பூச வேண்டும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை உட்கிரகித்து வைக்கும் மூலிகை வெட்பாலை ஆகும்.

No comments:

Post a Comment