Thursday, 19 December 2019

மூக்கிரட்டை

ஒற்றை மூலிகை, ஆனால் பல நோய்களுக்கு மருந்தாகும், அதுதான் மூக்கிரட்டை.

மூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம்.

இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.



மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது. மூளைக்கு ஆற்றல் அளித்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தரக்கூடியது.

மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். உணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, நன்றாக காய்ந்த மூக்கிரட்டை வேரை இடித்து, ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.

மூக்கிரட்டை வேரை லேசாக இடித்து, விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலம் இளகும். உடலில் தங்கியிருக்கும் நச்சு நீர், கிருமிகள் வெளியேறி சரும நோய்கள், வாத நோய்கள் விலகும். எடை குறைந்து அழகு மிளிரும். மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், சிறுநெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி போன்றவற்றை சம அளவு எடுத்து, தூளாக்க வேண்டும். இதை தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்து அழகு மிளிரும்.சிறுநீர் கோளாறுகளை குணமாக்கும் மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை தாவரம் தரையோடு படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது. நெருக்கமாக வளரும் இந்த தாவரத்தின் பூக்கள் வெள்ளையாகவும் மஞ்சளாகவும் இருக்கும். சாலையோரங்களிலும், வெளியிடங்களிலும் செழித்து வளர்ந்திருக்கும் இந்த தாவரம் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது. இதனை தனியாக சமைத்து சாப்பிட்டால் கசப்பு சுவையுடன் இருக்கும் என்பதால் கூட்டாக சமைத்து சாப்பிடுவார்கள். கண் கோளாறு நீங்கும் மூக்கிரட்டை கீரையை பறித்து நன்றாக அலசி எடுத்து பொடியாக நறுக்கி நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் கண் தொடர்புடைய நோய்கள் நீங்கும். மூக்கிரட்டை கீரையை கசக்கி சாறு பிழிந்து சுத்தமான துணியில் வடிகட்டி அதனை கண்களில் இரண்டு சொட்டு ஊற்றினால் கண் எரிச்சல் நீங்கும்.இதனை உணவில் அடிக்கடி உபயோகித்து வர கண் தொடர்புடைய நோய்கள் எட்டிப் பார்க்காது. சிறுநீர் கோளாறு நீங்கும் சிறுநீர்க் குழாய் கோளாறுகளை இக்கீரை உணவு குணமாக்கும். சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் மூக்கிரட்டையை சமைத்து உண்ண இது சிறுநீரை சுலபமாக பிரித்து வெளியேற்றும். இது மலச்சிக்கலை போக்க வல்லது. மூக்கிரட்டை கீரை இதயத்திற்கு பலம் தரும், அதை நல்ல முறையில் இயங்கச் செய்யும்.   மூலநோய் குணமாகும் மூக்கிரட்டைக் கீரையைக் கொண்டு அதைச் சுத்தம் செய்து, அம்மியில் வைத்து மைய அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும். இது காய்ச்சல் மற்றும் மலேசிய ஜூரத்தை போக்கும். மூட்டு வலிக்கு இது சிறந்த மருந்தாகும். இந்த கீரையை சாப்பிடும் போது அதிக காரம், மீன், கருவாடு, அதிக உஷ்ணம் தரும் உணவுகள், பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment