பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து சாறு எடுத்து குடித்து வந்தால் சீக்கிரமே நல்ல கலர் மாறுவதை உணரலாம். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
🌴
🌷
பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பீட்ரூட் சாறு உடலுக்கு குளிர்ச்சி தரும். பீட்ரூட் புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. பீட்ரூட் இரத்த சோகை, உடல் எடை ஆகியவற்றை குறைக்க செய்யும்.பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.
No comments:
Post a Comment