Wednesday, 29 August 2018

பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்

உப்பு தண்ணீர்  அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.
இதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் பெண்கள். இது போன்று பாத வெடிப்புகளுக்கு இயற்கை தாவரம் பழத்தை பயன்படுத்தலாம்.
1. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.
2. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

மூவர்ணப் பொரியல்

தேவையான பொருட்கள்:
காரட் — 100 கிராம்
பீன்ஸ் — 100 கிராம்
கோஸ் — 100 கிராம்
பச்சை மிளகாய் — 2
தேங்காய்த் துருவல் — 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு — அரை ஸ்பூன்
எண்ணெய் — 3 டீஸ்பூன்
இஞ்சி — கால் ஸ்பூன் (பொடியாக கட் பண்ணவும்)
வெங்காயம் — 1 (சிறியது கட் பண்ணவும்)
கறிவேப்பிலை — 2 இணுக்கு
உப்பு — தேவைக்கு.


செய்முறை:
காரட், பீன்ஸ், கோஸ் கட் பண்ணிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து காய்கறிகளைப் போட்டு வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
வெந்தவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும்.
சுவையான மூவர்ணப் பொரியல் ரெடி.

Wednesday, 22 August 2018

ஓட்ஸ் டயட் இட்லி

தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
ஓட்ஸ் — அரை கப்
உப்பு — தேவையான அளவு
புளித்த தயிர் — ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு — அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு — அரை தேக்கரண்டி
கடலை பருப்பு — அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி — அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துறுவிய கேரட், கொத்தமல்லி தலா- – அரை தேக்கரண்டி
பெருங்காயம் — ஒரு சிட்டிகை
எண்ணெய் — 2 தேக்கரண்டி

செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்துக் கொள்ளவும்.
பொடித்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கப் கோதுமை ரவை, புளித்த தயிர், தேவையான உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த மாவுடன் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
அதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் டயட் இட்லி தயார்.

அன்னாசியின் பொதுப் பயன்கள்

🍍அதிக அளவில் அன்னாசிப்பழம் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் கிடைக்கும். அன்னாசிப்பழம் ஜாம், ஐஸ்கிரீம், பழரசம் செய்யப் பயன்படுகிறது.

🍍பழத்திலிருந்து சாராயம் தயாரிக்கப்படுகிறது. தவிர ஆல்கஹhலும் தயாரிக்கப்படுகிறது.

🍍சாறு எடுத்த பின் எஞ்சிய சக்கை கால்நடை தீவனமாக பயன்படும். சக்கையிலிருந்து பசை, எரிசாராயம், வினிகர் இவை தயாரிக்கப்படும்.

🍍இலைகளிலிருந்து நு}ல் எடுக்கப்பட்டு நேர்த்தியான மெல்லிய பட்டு நெய்யப்படுகிறது.


🍍சமையலில் மணமும் சுவையும் ஏற்றும் கல்யாண சாப்பாடுகளில் பிரசித்தமானது பைன் - ஆப்பிள் ரசம். அன்னாசி அல்வா, கபாப், பல பழரசங்களுடன் சேர்த்த உற்சாக பானமாக செய்து உண்ணலாம்.

🍍மாமிச உணவுகளை சமைக்கும் முன் அன்னாசி சாறு பிழிந்து அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஊறவிட்டால் மாமிசம் நன்றாக வேகும். சமைக்கும் நேரம் பாதியாக குறையும்.

🍍மருத்துவ குணங்கள் அன்னாசியில் உள்ள புரோமலின் உணவின் செரிமானத்தை ஊக்குவிக்கும். என்ஸைசம் செரிமானம் குறைந்தவர்களுக்கு அன்னாசி மிகவும் நல்லது.

🍍மேலை நாடுகளில் மாமிச உணவுடன் சில துண்டுகள் அன்னாசி சாப்பிடுவது வழக்கம். மாமிசம் சுலபமாக செரிக்கும். நன்கு பழுத்த அன்னாசி சாறு சிறுநீர் கழிவினை தூண்டும்.

🍍குடலில் உள்ள புழுக்களை அழிக்கும். சிறுநீர் இயக்கத்தை மேம்படுத்தும் சீத பேதியை குணப்படுத்தும்.

🍍சிறுநீர் கற்களை கரைக்கும். வயிற்றில் டைபாயிடு கிருமிகளை அழிக்கும்.

🍍மலச்சிக்கல் அகலும். வயிற்று வலி குறையும்.

🍍நல்ல குரல் வளத்திற்கும், தொண்டைப்புண் அகலவும் அன்னாசி பயன்படும் பழச்சாற்றை வாயில் வைத்து கொப்பளித்தால் தொண்டைபுண் குறையும். வாய் நாற்றத்தைப் போக்கும்.

🍍அன்னாசி உடல் பலம் கூட உதவும். அதுவும் பழத்துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டால் உடல் பலம் கூடும்.

🍍இதய சம்பந்த நோய்களுக்கு அன்னாசி நல்லது. ரத்தக்குழாய் அடைப்புகளை போக்கும்.

🍍எலும்பு மெலிதல் நோய் உள்ளவர்களுக்கு வழக்கமான சிகிச்சையும் அன்னாசி சாறு குடித்து வந்தால் குணம் தெரியும்.

இறால் சாம்பார்

தேவையான பொருட்கள்:
சிறிய வகை இறால் – கால் கிலோ
வேக வைத்த துவரம் பருப்பு – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 4 பல்
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் – அரை தேக்கரண்டி
தேங்காய்ப் பால் – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – 10 இலை
வரமிளகு – 3
கொத்தமல்லி இலை – சிறிதளவு


செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வரமிளகாய் போட்டு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
அதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் நிறம் வரும்வரை வதக்கவும்.
வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கி உடைந்ததும் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் இறாலை போட்டு ஒரு வதக்கு வதக்கிய பின் அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு உப்பும் சேர்க்கவும்.
கொதித்ததும் அதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.
ஒரு 5 நிமிடத்திற்கு பின் கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சாதத்திற்கு, தோசை, இட்லிக்கு வெகு பொருத்தமாக இருக்கும்.

வாழைத்தண்டு

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.

பயன்கள் :

மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.


மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

வசம்பு பொடி

நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியை சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தர காய்ச்சல் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை மாலை வேளைகளில் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வென்னீரில் கலந்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும்

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.


5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.  அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

காதில் சீழ்வடிதல்

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

மலச்சிக்கல் தீர தினமும் ஒரு கொய்யா!

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப்  பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.

 சருமத்துக்கு மிகவும் நல்லது கொய்யா. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக்  குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.


​​ நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு​​ கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.  மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.

தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை  வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.

Thursday, 16 August 2018

சேப்பகிழங்கு

இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.

உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது. இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...

இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.

சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..

இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.

சேப்பகிழங்கில் புரதம் கொழுப்பு தாது உப்புகள், நார்சத்து மாவுச்சத்தும், காணப்படுகின்றன.

சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும்.


இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

இந்த கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும்.

இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும்.

மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.

குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.

சேப்பகிழங்கு கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது.

இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது.

இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும்.

தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.

இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும்.

காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.

வாழைக்காயின் மருத்துவ குணங்கள்

🍌வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடியது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.

🍌வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதுடன், மாவுச்சத்தும் உள்ளது. எனவே வாழைக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமனாகும். நல்ல வளர்ச்சியையும் அளிக்கும்.



🍌வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும். மேலும்
வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக்காய்கறி வழங்கப்படுகிறது.

🍌வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.
வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.

பேல் பூரி

தேவையான பொருட்கள்:
பொரி — 1 கப்
ஓமப்பொடி — 2 டேபிள் ஸ்பூன்
தட்டுவடை — 4
கடலைப்பருப்பு — 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை — 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் — 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி — 1 (பொடியாக நறுக்கியது)
நறுக்கிய மாங்காய் — 1 டேபிள் ஸ்பூன்
வேக வைத்த உருளைக்கிழங்கு — 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
புதினா/கொத்தமல்லி சட்னி — தேவையான அளவு
தக்காளி சாஸ் — தேவையான அளவு எலுமிச்சை சாறு — 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் — 1/4 டீ ஸ்பூன்
சாட் மசாலா — 1/4 டீ ஸ்பூன்
சீரகப் பொடி — 1/4 டீ ஸ்பூன்
கொத்தமல்லி — சிறிது



செய்முறை:
முதலில், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பவுலில் பொரியைப் போட்டு, அதில் தட்டுவடையை கையால் உடைத்து சேர்த்து, அத்துடன் எலுமிச்சையைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.
இறுதியில் எலுமிச்சை சாறை ஊற்றி மீண்டும் கிளறினால், பேல் பூரி ரெடி!!!

Monday, 13 August 2018

ஆலமரம்

இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் காலத்தில், இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் வர்த்தகர்கள் ஆலமரத்தடியில் சந்தைகள் கூடுவதைப் பார்த்தனர். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மொழி இன வேற்றுமைக்கு அப்பால் ஆலமரத்தடியில்தான் வியாபாரங்கள் நிகழ்ந்துவந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பனியாக்கள் (வியாபாரிகள்) ஒன்றுகூடிப் பணம் பரிமாரிக்கொள்வர். ஆலமரம் வாக்கின் அடையாளமாம். பேரம் பேசும்போது ஆலமரத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணம் எப்படியும் வந்துவிடுமாம். வர்த்தகர் கூட்டத்தைக் குறிக்கும் ‘பனியாவே’ – ஆங்கிலத்தில் மரத்தின் பெயரானது. இதுவே ‘பானியன் ட்ரீ’ என்று பெயர் வந்த வரலாறு.

ரைஸ் ரோல்ஸ்

தேவையானவை:
சாதம் - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து ரோல்களாக செய்யவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, ரோல்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சில்லி பிரை இட்லி

தேவையான பொருட்கள்:
இட்லி – 12
தக்காளி சாஸ் – 4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி – 2 கொத்து
சில்லி சிக்கன் மசாலா – 1 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
கரம்மசாலா தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
வெங்காயத்தாள் – சிறிதளவு
குடமிளகாய் – 1
சோயா சாஸ் – 2 ஸ்பூன்



செய்முறை:
இட்லியை வேக வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தாள், குடமிளகாயை துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு 20 விநாடிகள் வதக்கவும்.
அதன் பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயை போட்டு வதக்கவும்.
அத்துடன் உப்பு, சில்லிப் பவுடர், தக்காளி சாஸ், சோயா சாஸ், கரம்மசாலா தூள் போட்டு நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மேலே தூவி கிளறவும்.
இப்போது பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விடவும். மசாலா இட்லியில் சேரும்படி பிரட்டி விடவும்.
சுமார் ஒரு நிமிடம் வேகவிட்டு, வெங்காயத்தாள் சேர்த்து கிளறவும். மசாலா இட்லியில் இறங்கியுள்ளதா என்று ருசி பார்த்து, இறக்கவும்.
சுவையான சில்லி இட்லி ரெடி.
இட்லியை பொரிக்காமல், வேக வைத்த இட்லியை போட்டும் செய்யலாம்.

தேள் கடி மருந்துகள்

எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.



பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும். குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறி நாய் கடித்து விட்டால்

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

Friday, 10 August 2018

பாம்பு கடித்து விட்டால்

உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.