சில விடயங்களை கவனித்து பாருங்கள். அவை சின்ன சின்ன விடயங்களாக இருக்கும். ஆனால் பெரும் நன்மைகளை செய்து விடும்.
இங்கும் கூட "கை தட்டுதல்" என்பது ஒரு சின்ன விடயம். நாம் பிறரை உற்சாகப்படுத்த கைகளை தட்டுகிறோம். அவர் அந்த ஒலி அலைகள் மூலம் உற்சாகம் கொள்கிறார். ஆனால் நாம் நம் உடலில் தோன்றும் அதிர்வலைகளால் உற்சாகம் கொள்கிறோம்.
நாம் அடுத்தவர்களுக்காக கை தட்டும் அதே நேரம் நமக்காகவும் கொஞ்சம் கை தட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.