Saturday, 10 October 2020

கிருத்திகை மந்திரம்

 🌺வாழ்வில் அனைத்து யோகங்களையும் பெற உதவும் கிருத்திகை மந்திரம்🏵


🌺நமக்கு கிடைத்த இந்த வாழ்கையை சிறப்பாக்கிக் கொள்ள நமக்கு நோய்கள் அணுகாத உடலாரோக்கியமும், நினைத்த போது நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நல்ல செல்வ நிலையும் வேண்டும். 


🌺ஒரு சிலரை தவிர, எல்லோருக்கும் இது போன்ற ஒரு யோகமான வாழ்வு அமைவதில்லை. 


🌺அப்படி யோக வாழ்வு அமையாதவர்களும், அதைப் பெறுவதற்கு முருகப் பெருமானை, அவருக்குரிய கிருத்திகை நட்சத்திர தினத்தன்று வழிபட கூற வேண்டிய மந்திரம் இது.


🌸🌼மந்திரம் : 🦚

 “ஓம் வன்னிதேஹாயை வித்மஹே 

     மஹாதபாயை தீமஹி| 

      தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||”🌸


 🌺இம்மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்று, காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று, முருகனுக்கு தீபாராதனை காட்டும் சமயத்தில் இம்மந்திரத்தை 9 அல்லது 27 எண்ணிக்கையில் கூறி வழிபட்டு,


  🌺அந்த கோவிலில் 9 முறை பிரதிட்சணம் வர வேண்டும். இப்படி ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் செய்து வந்தால், 


  🌺அந்த முருகப் பெருமானின் அருள் நமக்கு கிடைத்து, நம் கர்மவினைகள் அனைத்தும் நீங்கி, அனைத்து யோகங்களையும் பெற்று 


  🌺நமது எதிர்கால வாழ்வு சிறக்கும்.

No comments:

Post a Comment