Monday, 22 October 2018

ஆஸ்துமா இளைப்பு சளி குணமாக எளிய மருந்து

மாதுளம்பழ சாறு  ......  பதினைந்து மில்லி
இஞ்சி சாறு  ........ பதினைந்து  மில்லி
தேன்   ....  ஒரு தேக்கரண்டி

மூன்றையும் கலந்து நாள்தோறும் ஒருவேளை உணவுக்குப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்துக் குடித்து வர குணம் கிடைக்கும்

இருமல்

1. எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
2. அரசு  மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

3. வறட்டு இருமல் குணமாக கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

4. விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.


கல்லீரல் பலப்பட

தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.

குலாப் ஜாமுன் செய்முறை

தேவையான பொருட்கள்
பால் – தேவைக்கேற்ப
சர்க்கரை - 2 கப்
பால் பவுடர் - 1 கப்
மைதா - 1 / 2 கப்
சமையல் சோடா – 1 / 2 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
சர்க்கரை பாகு செய்வதற்கு
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய் - 2
செய்முறை
சர்க்கரை பாகு
மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும்.
ஜாமுன்
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்
.

Tuesday, 9 October 2018

மூட்டு வலிக் கசாயம்

சீந்தில் தண்டு   ...........  ஐந்து கிராம்
நிலவேம்பு ...........  ஐந்து கிராம்
ஓமம் ...........  ஐந்து கிராம்
சீரகம் ...........  ஐந்து கிராம்
சுக்கு ...........  ஐந்து கிராம்
மிளகு ...........  ஐந்து கிராம்
திப்பிலி ...........  ஐந்து கிராம்

மசாலா இட்லி

தேவையான பொருட்கள்:
இட்லி- 8
பட்டை, சோம்பு,ஏலக்காய்- சிறிதளவு
இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
தேங்காய்- 1/4 டம்ளர்
நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு


செம்பருத்தி பூ தோசை

தேவையான பொருட்கள் :
செம்பருத்தி பூ – 6
தோசை மாவு – 250 கிராம்
நல்லெண்ணெய் – தேவைக்கு
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
ப.மிளகாய் – 2

மலச்சிக்கல் நீங்க

மகிழவிதைகளை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து நன்கு அரைத்து மாச்சல்லடையில் சலித்து காலை மாலை ஒரு டீஸ்பூன் எடுத்து சமஅளவு நெய் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் அண்டாது, மலமிளகும்.

பெரும்பாடு நீங்க

தரைபசலை கீரையை கொண்டுவந்து சுத்தம் செய்து  அதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிய வெங்காயம் ஒன்று சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து நீராகரத்தில் கலந்து குடுத்து வர பெரும்பாடு என்னும் அதிக இரத்தபோக்கு விலகும்.நலம் பெறுக.

Wednesday, 3 October 2018

ஆரோக்யத்துடன் வாழ சில குறிப்புகள்

⬤ உப்பு, தயிர், வெங்காயக் கலந்த சாலட் உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்


⬤ மணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து வரவும் இல்லை என்றால் இளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பின்னாலும் நாக்கு/வாய் புண் சீக்கிரம் ஆறும்.


⬤ எலுமிச்சை தோல் கொண்டு பல் தேய்க்க பற்கள் பளபளக்கும்.


பசலைக் கீரை பஜ்ஜி

தேவையான பொருட்கள்:
பசலைக் கீரையின் இலை - 1 கப்
கடலை மாவு - 1 கப்
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எள் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) தண்ணீர் - தேவையான அளவு