Monday, 24 September 2018

ப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு — 2
எண்ணெய் — தேவையான அளவு
மிளகாய்த்தூள்/மிளகுத்தூள் — ஒரு தேக்கரண்டி
உப்பு — தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை 1/4 அங்குல தடிப்பில் நீளமான துண்டுகளாக நறுக்கி சுத்தப்படுத்தவும். குளிர்ந்த தண்ணீரில் போட்டு 1-1/2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.


பிறகு உருளைத்துண்டுகளை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்து விடவும்.
காய்ந்த எண்ணெயில் இந்த துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்தவற்றை ஒரு பேப்பரில் வைத்துக்கொள்ளவும் .
சூடாக இருக்கும் போதே அதில் உப்பு, மிளகாய்/மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும்.
சுவையான ப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார்.

No comments:

Post a Comment