Monday, 24 September 2018

தொப்பையைக் குறைக்க வழி

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

நாயுருவி ஊட்டச்சத்து மாவு

தேவையான பொருள்கள்

காய்ந்த நாயுருவி இலை – 100 கிராம்
கொண்டைக் கடலை – 250 கிராம்
சோயாபீன்ஸ் – 250 கிராம்
சிறுபருப்பு – 100 கிராம்
மிளகு – ½ ஸ்பூன்
ஏலக்காய் – 5 கிராம்



ஆரோக்யத்துடன் நோயின்றி வாழ சில குறிப்புகள்

⬤ விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.


⬤ சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.


⬤ உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.


⬤ முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.


ப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

தேவையான பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு — 2
எண்ணெய் — தேவையான அளவு
மிளகாய்த்தூள்/மிளகுத்தூள் — ஒரு தேக்கரண்டி
உப்பு — தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை 1/4 அங்குல தடிப்பில் நீளமான துண்டுகளாக நறுக்கி சுத்தப்படுத்தவும். குளிர்ந்த தண்ணீரில் போட்டு 1-1/2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.


பிறகு உருளைத்துண்டுகளை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்து விடவும்.
காய்ந்த எண்ணெயில் இந்த துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்தவற்றை ஒரு பேப்பரில் வைத்துக்கொள்ளவும் .
சூடாக இருக்கும் போதே அதில் உப்பு, மிளகாய்/மிளகு தூள் சேர்த்து குலுக்கி விடவும்.
சுவையான ப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார்.