Monday, 26 October 2020

கை தட்டுதல்

சில விடயங்களை கவனித்து பாருங்கள். அவை சின்ன சின்ன விடயங்களாக இருக்கும். ஆனால்  பெரும் நன்மைகளை செய்து விடும். 

இங்கும் கூட "கை தட்டுதல்" என்பது ஒரு சின்ன விடயம். நாம் பிறரை உற்சாகப்படுத்த கைகளை தட்டுகிறோம். அவர் அந்த ஒலி அலைகள் மூலம் உற்சாகம் கொள்கிறார். ஆனால் நாம் நம் உடலில் தோன்றும் அதிர்வலைகளால் உற்சாகம் கொள்கிறோம். 


நாம் அடுத்தவர்களுக்காக கை தட்டும் அதே நேரம் நமக்காகவும் கொஞ்சம் கை தட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். 

பிராண முத்திரை

மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

Saturday, 10 October 2020

கிருத்திகை மந்திரம்

 🌺வாழ்வில் அனைத்து யோகங்களையும் பெற உதவும் கிருத்திகை மந்திரம்🏵


🌺நமக்கு கிடைத்த இந்த வாழ்கையை சிறப்பாக்கிக் கொள்ள நமக்கு நோய்கள் அணுகாத உடலாரோக்கியமும், நினைத்த போது நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நல்ல செல்வ நிலையும் வேண்டும். 

சோம வாரம் கார்த்திகை விரதம்

 சோம வாரம் கார்த்திகை விரதம் நவக்கிரக வழிபாடு

 புரட்டாசி சோமவாரத்தில் சிவ வழிபாடு செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. அதேபோல் சோம வாரத்தில் கார்த்திகை விரதம் வருவது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. இந்தநாளில் சிவனாரை வணங்கி, முருகக் கடவுளை வணங்கி, நவக்கிரகத்தை வலம் வருவது தோஷங்கள் அனைத்தையும் நீக்கும். சந்தோஷத்தைப் பெருக்கும்.

 சோமவாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். திங்கள் என்றால் சந்திரன். சோமன் என்றால் சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று. சந்திரனைப் பிறையென சிரசில் சூடிக்கொண்டிருப்பவர் என்பதால் ஈசனுக்கு சோமன் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் சந்திரசேகரன் என்கிற திருநாமமும் உண்டு.